பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தளபதி விஜயுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி மற்றும் யூட்யூப் சேனல் மூலம் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். அவரது புகைப்படம் மற்றும் திருமண பத்திரிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இவர்களது திருமணம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வனிதா பீட்டர் பற்றி கூறும்பொழுது "அவர் அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்நிலையில் இருவரும் தற்போது திருமணத்திற்கான வேளைகளில் பிசியாக உள்ளனர். தன் வருங்கால கணவருடன் நடிகை வனிதா வெளியிட்ட புகைப்படம் இதோ..!
Tags : Vanitha, Marriage, Peter Paul