கடந்த பிக்பாஸ் சீசன் 3 இல் பங்கு கொண்டவர் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. அந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு நடிகையாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை நேற்றைய தினம் மாரடைப்பால் மரணம் அடைந்த சோக செய்தி வெளியாகியுள்ளது.
இதுபற்றி நடிகை வனிதா ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமாக உள்ளது. இதை எப்படி அவர்கள் கையாளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முக்கியமாக அவர்தான் இத்தனை வருடங்களாக அந்த குடும்பத்தையும் 3 மகள்களையும் காப்பாற்றி வந்தார். இதயமே நொறுங்கிவிட்டது... வாழ்க்கையை கணிக்க முடியவில்லை... பயமாக இருக்கிறது... எப்படியும் அவரது உடலை அங்கிருந்து கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.