திரிஷா இப்படி திடீர்னு இறங்கிட்டாங்களே..!! ஒருவேளை அந்த படத்துக்காக ரெடி ஆகிறாங்களோ..?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை திரிஷா வெளியிட்டுள்ள ரீசன்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த இவர், விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் ரசிகர்களுக்கு ஜானுவாக சூப்பர் ட்ரீட் கொடுத்தார். இதனிடையே ராங்கி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட இவரின் படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது திரிஷா வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது குதிரை பண்ணை ஒன்றுக்கு விசிட் அடித்துள்ள திரிஷா, அங்கிருக்கும் குதிரையுடன் ஹெல்மெட் அனிந்தபடி ஒரு போஸ் கொடுத்துள்ளார். 

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ், போட்டோவுக்கு லைக்ஸ் கொடுத்து வைரலாக்கி வருவதுடன், ஒருவேளை மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்காகதான் திரிஷா ரெடி ஆகிறாரோ.?! என்று சீரியஸ் டிஸ்கஷன்ஸ் நடத்தி வருகின்றனர். 

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்து, பாண்டிச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோ | Actress trisha's latest photo goes viral in social media

People looking for online information on Mani Ratnam, Ponniyin Selvan, Trisha will find this news story useful.