பிருந்தா ஷூட்டிங்கில் பிசியான த்ரிஷா... இதுதான் முதல் முறையாம்... ரசிகர்கள் என்ன சொல்றாங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கெட்டப்பில் நடிகை த்ரிஷாவை காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், காக்கி உடை அணிந்து இரண்டு நாய்களுடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Advertising
>
Advertising

ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக ஒரு சீனில் வந்து செல்லும் த்ரிஷா 2002ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சமீபத்தில் சினிமாவில் 19வது ஆண்டை நிறைவு செய்த நடிகை த்ரிஷா ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். மெளனம் பேசியதே படத்தில் எப்படி இருந்தாரோ அதே அழகுடன் இப்போதும் செம க்யூட்டாக இருக்கிறார்.

ஏற்கெனவே த்ரிஷா நடிப்பில், சதுரங்க வேட்டை 2, ராங்கி மற்றும் கர்ஜனை போன்ற படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன.  இந்த ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வரவிருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் த்ரிஷா நடித்திருக்கிறார். குந்தவை கதாப்பாத்திரத்தில் த்ரிஷா எப்படி இருக்க போகிறார் என்ற ஆவலுடன் அனைவரும் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்ட த்ரிஷா, இப்போது ஹைதராபாத்தில் 'பிருந்தா' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். காக்கி உடை அணிந்து இரண்டு நாய்களுடன் விளையாடும் புகைப்படத்தை, த்ரிஷா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாமி, என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தாலும், காக்கி உடையில் நடிப்பது இதுவே முதல் முறை.

சோனி லைவ் ஓடிடி தளத்திற்காக சூர்யா வாங்கலா இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடித்து வருகிறார் த்ரிஷா. தெலுங்கில் உருவாக்கி மற்ற மொழிகளில் டப் செய்யவிருக்கிறார்கள். அவினாஷ் கொல்லா மற்றும் ஆஷிஷ் கொல்லா இணைந்து தயாரிக்கின்றனர். சக்தி காந்த் கார்த்திக் மற்றும் தினேஷ் கே பாபு, இசை மற்றும் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

தமன்னா, அமலா பால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட  நடிகைகள் ஒடிடி தளத்தில் வெளியாகி வரும் வெப்சீரிஸ்களில் நடித்துள்ளனர். அதன்  வரிசையில் தற்போது த்ரிஷா இடம்பிடித்துள்ளார்.  விரைவில் சோனி லைவ் ஒடிடி தளத்தில் இந்த வெப் தொடர் வெளியாக உள்ளது. த்ரிஷா கடைசியாக பரமபதம் விளையாடு படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Trisha with dogs during the shooting of Brinda

People looking for online information on Brinda, Chennai, Police, SonyLIV, Telugu, Trisha Krishnan, Viral photo, Webseries will find this news story useful.