நடிகை திரிஷா தனது இளம் வயதில் நடந்த சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த இவர், விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் ரசிகர்களுக்கு ஜானுவாக சூப்பர் ட்ரீட் கொடுத்தார். இதனிடையே ராங்கி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட இவரின் படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். 1999- ஆம் வருடம் அவர் மிஸ் சென்னை போட்டியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில், ''20 வருடங்களுக்கு முன்னர், இதே செப்டம்பர் 30-ஆம் தேதிதான் என் வாழ்க்கையை மாற்றியது'' என பதிவிட்டுள்ளார். திரிஷாவின் இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.