சென்னை: நடிகை த்ரிஷா கொரோணாவில் இருந்து பூரண குணம் அடைந்துள்ளதாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை எடுத்தார். இதனை டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தார். அதில் " எல்லா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும், புத்தாண்டுக்கு சற்று முன்பு நான் கொரோனா பாசிட்டிவ் தொற்றுக்கு உள்ளானேன். இது எனது மிகவும் வேதனையான வாரங்களில் ஒன்றாக இருந்தாலும், எனது தடுப்பூசிகளால் இன்று நான் குணமடைந்து நன்றாக உணர்கிறேன்.
அனைவரும் இவ்வாறே செய்து முகமூடி அணியுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது மருத்துவ சோதனைகளை முடித்துவிட்டு விரைவில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவர்களின் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் டிவிட்டரில் தான் முழுமையாக கொரோணாவில் இருந்து குணமாகி விட்டதாகவும், கொரோனா சோதனை நெகட்டிவ் எனவும்,முதல் முறையாக நெகட்டிவ் வார்த்தையை கேட்டு மகிழ்ச்சியடைவதாகவும், 2022 யை எதிர் கொள்ள இப்போது தயார் என்றும், டிவிட்டரில் அறிவித்துள்ளார். நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் கொரோனா 3-வது அலையின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 5 இலக்கத்தை தொட்டு உள்ளது. அதேநேரம் கொரோனாவின் 3 அலையில் சென்னையில் தினசரி பாதிப்பு 4 இலக்கத்தை தொட்டுள்ளது. இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், முகக்கவசத்தை அணிய வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய, மாநில சுகாதாரத் துறை தெரிவித்துவருகின்றன.