டாப்ஸி நடிக்கும் மிதாலி ராஜின் BIO-PIC.. அடுத்தடுத்து போட்டோ ஷூட்டால் ட்ரெண்டாகும் செம போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை டாப்ஸி பன்னு 'சபாஷ் மிது' திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read |பொன்னியின் செல்வன் படத்தின் த்ரிஷா போஸ்டர்.. வந்தியத்தேவன் கார்த்தி போட்ட வைரல் ட்வீட்!

இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மாற்றியமைத்த இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'சபாஷ் மிது' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த 2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக பல உலக சாதனைகளை முறியடித்து ஓய்வு பெற்ற இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையை இப்படம் கமர்சியலாக விவரிக்க உள்ளது.

2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான சபாஷ் மிது திரைப்பட டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

 

 

இப்படத்தில் டாப்ஸி பண்ணு டைட்டில் ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  நடிகர் விஜய் ராஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படம் ஜூலை 15 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

 

இப்படத்தின் ரிலீசை ஒட்டி பல்வேறு நிகழ்வுகளில் நடிகை டாப்ஸி பங்கெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக  போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் டாப்ஸி தொடர்ந்து வெளியிட்டுள்ளார்.

 

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் ப்ரோமோஷன் நிகழ்வுகளுக்கு நடிகை டாப்ஸி மூன்று முறை போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் உடையின் நிறம் நீலம் என்பதால் இந்த போட்டோ ஷூட்களில் நீல நிறம் பிரதான பங்கு வகித்தது.

 

மூன்று போட்டோ ஷூட்களிலும்  நீல நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் போட்டோக்களில் டாப்ஸி காட்சியளிக்கிறார்.

இந்த நிலையில் நடிகை டாப்ஸி புதிய போட்டோ ஷூட்டில் வெள்ளை நிற உடையுடன் நீல நிற காலணி மற்றும் ஆபரணங்களுடன் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு "எட்டிப்பார்க்கும் நீலம்" என தலைப்பிட்டு "சபாஷ் மிது வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ளன" என கூறியுள்ளார்.

 

இப்படத்தை Viacom18 Studios தயாரித்துள்ளனர், சபாஷ் மிதுவின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அஜித் அந்தாரே பணியாற்ற,  ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார் மற்றும் ப்ரியா அவென் இப்படத்தினை எழுதியுள்ளார்.

Also Read | ஒளிப்பதிவாளராக மாறிய மாளவிகா மோகனன்.. விளையாட்டு சாமானாக மாறிய கேமரா !

தொடர்புடைய இணைப்புகள்

Actress Tapsee Latest Photoshoot for Shabaash Mithu Movie Release

People looking for online information on Shabaash Mithu Movie, Tapsee, Tapsee Latest Photoshoot, Tapsee pannu will find this news story useful.