நடிகை தமன்னாவின் அடுத்த திரைப்படம்! முன்னாள் CM மகன் கூடவா? சூப்பர் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா, தற்போது தெலுங்கு மாஸ்டர் ஷெப் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார். இவர் நடிப்பில் இந்தியில் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில், இந்தியில் நடிகை ஜெனிலியாவின் கணவரும், முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ரிதேசுக்கு OTT-யில் முதல் அறிமுக திரைப்படமாகும்.

சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த ரொமான்டிக் காமெடி  படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாகிறது. இது குறித்து நடிகை தமன்னா, நடிகர் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தங்களது டிவிட்டரில் அறிவித்துள்ளனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

ACTRESS TAMANNAAH TO PAIR OPPOSITE THIS POPULAR HERO IN HER NEXT

People looking for online information on Tamannaah, Tamannaah Bhatia will find this news story useful.