எழுத்தாளராக புதிய அவதாரம் எடுக்கும் நடிகை தமன்னா! புத்தகம் எப்போ ரிலீஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தமன்னா, தற்போது தெலுங்கு மாஸ்டர் ஷெப் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

தமிழில் கடைசியாக விஷாலின் ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்திருந்தார். நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்து ஓடிடியிலும் தடம் பதித்துள்ளார். இவர் நடிப்பில் இந்தியில் 'Bole Chudiyan' மற்றும் தெலுங்கில் 'That Is Mahalakshmi' படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

இந்தியில் நடிகை ஜெனிலியாவின் கணவரும், முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ’பிளான் ஏ பிளான் பி’ என்ற புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் எழுத்தாளராகவும் புதிய அவதாரம் எடுக்கிறார் நடிகை தமன்னா. ‘பேக் டூ தி ரூட்ஸ்’ என்ற புத்தகத்தை நடிகை தமன்னா எழுத்தாளர் லுக் கோட்டின்கோ உடன் இணைந்து எழுதியுள்ளார். பெங்குயின் பதிப்பகத்தின் வெளியீடாக இந்த புத்தகம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் நாள் வெளியாகிறது. 

எழுத்தாளர் லுக் கோட்டின்கோ, ஏற்கனவே நடிகைகள் ஷில்பா ஷெட்டி மற்றும் அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்து நூல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Actress Tamannaah Bhatia co-authored a new book

People looking for online information on Tamannaah Bhatia will find this news story useful.