நேரடியாக OTT-யில் ரிலீசாகும் புதிய PAN INDIA படம்.. களமிறங்கிய நடிகை தமன்னா! தெறி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை தமன்னா நடிக்கும் புதிய படத்தின் படத்தின் அப்டேட்  வெளியாகி உள்ளது.

Actress Tamanna Babli Bouncer Movie Dubbing Work Started
Advertising
>
Advertising

Also Read | வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்த ஸ்ருதிஹாசன்.. வீட்டில் இருந்து வெளியிட்ட வைரல் PHOTO!

பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்க்கார், பெண்களை முதன்மைப்படுத்தும் சிறப்பு வாய்ந்த கதைகளை வழங்குவதில் சிறந்த படைப்பாளியாக அறியப்படுபவர்.

தமன்னா நடிப்பில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கற்பனைக் கதையாகும்.

பிப்ரவரி 18 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் நிறைவடைந்ததாக  நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டப்பிங் பணிகளை தற்போது நடிகை தமன்னா துவங்கி உள்ளார். டப்பிங் பேசிக்கொண்டே நடனம் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் தமன்னா உடன் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதை மற்றும் திரைக்கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் எழுதி உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தின் முதல் இரண்டு லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களிலும் தமன்னா பாட்டியா பவுன்சர் சாயலில் தோன்றியிருந்தார்.

Also Read | “நானும் TTF -ம் ஒரு Ride போனது குத்தமாங்க.?” - Pyros Girl கொடுத்த பளீச் பேட்டி.. வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Tamanna Babli Bouncer Movie Dubbing Work Started

People looking for online information on Babli Bouncer Movie Updates, Tamanna Babli Bouncer Movie, Tamannaah, Tamannaah Bhatia will find this news story useful.