கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சுனைனா. அதன்பிறகு வம்சம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த சுனைனா அதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
Images are subject to © copyright to their respective owners
பின்னர், மாசிலாமணி, நீர்ப்பறவை, சமர், வனம், தெறி, சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களில் சுனைனா நடித்திருந்தார். சமீபத்தில் விஷாலுடன் சுனைனா நடித்திருந்த லத்தி திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
இந்நிலையில் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை நடிகை சுனைனா அளித்திருக்கிறார். இதில், சினிமா குறித்து மிகவும் ஜாலியாக பல்வேறு விஷயங்களை பற்றி பேசி இருந்தார் சுனைனா.
சுனைனாவின் ஜாலி ஷேரிங்ஸ்
காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான சமயத்தில் அந்த படங்களின் ப்ரோமோக்கள் அடிக்கடி டிவியில் ஒளிபரப்பானது குறித்தும், அதை பார்ப்பவர்கள் தன்னிடம் என்னென்ன பேசினார்கள் என்பது பற்றியும் நடிகை சுனைனா மிக ஜாலியாக பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில், தெறி படத்தில் நடித்தது குறித்தும் சுனைனா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
விஜய் - அட்லி கூட்டணியில் தெறி
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த திரைப்படம் தெறி. இருவரின் கூட்டணியின் முதல் திரைப்படமாக இது உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, ராதிகா, மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் விஜய் திருமணத்திற்காக பார்க்கும் பெண்ணாக நடித்த சுனைனா, ஒரு சில நிமிடங்கள் மட்டும் தோன்றி இருப்பார்.
அப்படி இருக்கையில், இந்த பேட்டியில், தான் சினிமாவில் இருக்கும் ஆளாக மாறி நிகழ்ச்சி நெறியாளர் சுனைனாவிடம் ஒவ்வொரு கருத்தை முன் வைத்திருந்தார். "இவங்க நல்ல ஹீரோயினா நடிச்சுட்டு வந்தாங்க. எதுக்கு அவங்க தெறி -ல நடிக்கணும். அப்ப உங்களை எல்லாருமே மாறி பார்ப்பாங்கல்ல. அதாவது அவங்க வந்து ஒரு சீன்ல நடிப்பாங்க, ஒரு சாங் நடிப்பாங்க. அப்படி எல்லாம் அப்ரோச் பண்ணுவாங்க. தெறி -ல நடிச்சுருக்க கூடாது" என்ற ஒரு வாக்குமூலத்தை முன்வைக்க, இது பற்றி விளக்கம் கொடுத்தார் சுனைனா.
"தெறி படத்துல நடிச்சது"..
"எனக்கு கட் ஃபீலிங் என்ன சொல்லுதோ அதுதான் நான் பண்ணுவேன். எல்லாருக்குமே அவங்க என்ன பண்ணனும் அப்படின்னு சுயமான ஒரு முடிவு இருக்கும். உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை நீங்க செய்வீங்க. அந்த சமயத்துல என்ன தோணுதோ, அதை பண்ணுவீங்க. தெறி படத்துல நான் ரொம்ப விரும்பி தான் பண்ணுனேன். ஆனால், நான் பண்ண வேணாம்ன்னு நடிக்க மறுத்த படங்கள் நிறைய இருக்கு, அது ஒரு லிஸ்ட்டே இருக்கு" என சுனைனா தெரிவித்தார்.