பிரபல நடிகைக்கு கொரோனா வைரஸ் டெஸ்ட் பாசிட்டீவாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் சுமலதா. இவர் தமிழில் ரஜினி நடித்த முரட்டுக்காளை, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது சுமலதா தனது கொரோனா வைரஸ் டெஸ்ட் பாசிட்டீவ் என வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், ''எனக்கு கொரோனா வைரஸ் டெஸ்ட் பாசிட்டீவ் என வந்துள்ளது. தொகுதி ரீதியாக பலரை சந்தித்தித்தால் வந்திருக்கலாம். இப்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். இதிலிருந்து நான் சீக்கிரம் மீண்டு வருவேன் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். தயவு செய்து என்னை சந்தித்தவர்கள் அனைவரும் உடனே கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுங்கள். இந்த போரை நாம் ஒன்றிணைந்து வெள்வோம்'' என தெரிவித்துள்ளார்.