நடிகை ஶ்ரீபிரியாவின் அம்மாவும், பிரபல பரதநாட்டிய குருவுமான குடந்தை கிரிஜா மரணம்..‌

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஶ்ரீபிரியாவின் அம்மாவும் பிரபல பரதநாட்டிய கலைஞருமான கிரிஜா பக்கிரிசாமி மரணம் அடைந்துள்ளார்.

Advertising
>
Advertising

புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான குரு காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளையின் மனைவியான குடந்தை கிரிஜா பக்கிரிசாமியும் பிரபல பரதநாட்டிய கலைஞர் ஆவார். குடந்தை கிரிஜா பக்கிரிசாமி, காதோடு தான் நான் பேசுவேன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் நீயா, நட்சத்திரம் போன்ற சில படங்களை தயாரித்துள்ளார். இச்சூழலில் உடல் நலக்குறைவு காரணமாக தன்னுடைய 88வது வயதில் கிரிஜா பக்கிரிசாமி இறந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மீனாட்சி (லேட்) மற்றும் ஶ்ரீபிரியா என்ற இரு மகள்களும் ஶ்ரீ காந்த் என்ற ஒரு மகனும் உண்டு. இவரது இறுதி சடங்கு நாளை மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு முகவரி: 10, முத்துப்பாண்டியன் அவென்யூ, சாந்தோம், மயிலாப்பூர். (சரவணபவன் ஹோட்டல் அருகில்)

Actress Sripriya Mother Girija Pakkirisamy passed away

People looking for online information on Girija Pakkirisamy, Girija Pakkirisamy Pillai, Guru Shri Pakkirisami Pillai, Sri priya will find this news story useful.