மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, சித்தார்த், ஆர்.மாதவன் மற்றும் பலர் நடித்து 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆய்த எழுத்து.
இதன் ஒரு காட்சியில் சூர்யாவிடம் அவருடைய அம்மா பேசும்பொழுது, “20 வருடமாக உங்க அப்பாவுக்காக தினசரி காத்திருந்தாச்சு. காயம் இல்லாமல் வருவாரா? அடிப்பட்டு வருவாரா? உயிரோடுதான் வருவாரா? பெட்டியில்தான் வருவாரா?னு ... எல்லாம் முடிஞ்சுதுன்னு நினைச்சேன்!” என்று புலம்புவார்.
இதற்கு அவர் மகள் பதில் சொல்லும் பொழுது, “அப்பாவை குறை சொல்லாதம்மா... ஊர் ஊராகச் சென்று பெட்டிஷன், பொது ஆக்கிரமிப்பு என எல்லா சிக்கல்களையும் எடுத்து நாட்டுக்காக வாதாடினார் அப்பா” என்று பேசுவார். பின்னர் மீண்டும் சூர்யாவுடன் பேசும் அவருடைய அம்மா, “மத்தவங்களைப் போல நீயும் இருந்தா என்னடா உனக்கு? உங்க அப்பாவோட எல்லாம் முடிஞ்சு போச்சுனு நினைச்சேன் ” என்று கேட்பார்.
அப்பொழுது அவருக்கு பதில் அளிக்கும் சூர்யா, “அப்பா இன்னும் சாகலம்மா... உள்ளதான் இருக்கிறார்!” என்று என்று உருக்கமாக பேசுவார். இந்த காட்சியை பகிர்ந்த பாடகர் மற்றும் நடிகை சௌந்தர்யா பால நந்தகுமார் ஆய்த எழுத்து மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களில் இரண்டிலும் வழக்கறிஞர் சந்துரு என்கிற கேரக்டர் இடம்பெறுவதை குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்.
ஆய்த எழுத்து திரைப்படத்தில் சூர்யாவின் அப்பாவின் கேரக்டர் வழக்கறிஞர் சந்துரு என்கிற பெயரில் வரும். அண்மையில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம், காவல்துறையினரின் மனித உரிமை மீறலை தோலுரித்துக் காட்டியது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா, வழக்கறிஞர் சந்துரு என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடி நீதி பெற்றுத் தரும் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்திருப்பார். அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில், நேரடியாக இப்படம் வெளியானது. இந்நிலையில்தான் நடிகை மற்றும் பாடகியான சௌந்தர்யா பால நந்தகுமார் ஆய்த எழுத்து படத்தில் சூர்யாவின் தந்தையின் பெயர் வழக்கறிஞர் சந்துரு என குறிப்பிட்டு அப்படக் காட்சியை தமது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திட்டம்-2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதேபோல் பிரபு ராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக் நடித்த என்னங்க சார் உங்க சட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓட்டிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது