நடிகை சோனம் கபூருக்கு குழந்தை பிறந்துள்ளது.
தயாரிப்பாளர் போனிகபூரின் தம்பியும் பிரபல நடிகரான அனில் கபூரின் மகள் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். சோனம் கபூர்.
கடந்த 2018-ல் நீண்டகாலமாக நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துக் கொண்டனர். மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமான திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
சோனம் கபூர் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும், பேஷன் புகைப்படங்களையும் பதிவேற்றுவார். சில நாட்களுக்கு முன் கர்ப்பம் குறித்த செய்தியை வெளியிட்ட சோனம் கபூர், சோனம் மற்றும் ஆனந்த் அஹுஜா தங்களின் முதல் குழந்தை உருவான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
சில மாதங்களுக்கு முன் முதல்முறையாக நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜா ஆகியோர் தங்களது ‘பேபிமூனுக்காக’ இத்தாலியின் புளோரன்ஸ் நகருக்கு சென்றனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் நடிகை சோனம் கபூருக்கு இன்று (20.08.2022) ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை நீது கபூர் இன்ஸ்டாகிராமில் தனது வாழ்த்துக்களை சோனத்தின் பெற்றோர்களான அனில் மற்றும் சுனிதா கபூருடன் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்த சோனம் கபூர் மற்றும் ஆனந்தின் அறிக்கையையும் நீது கபூர் பகிர்ந்துள்ளார். அதில், "20.08.2022 அன்று, எங்கள் அழகான ஆண் குழந்தையை நாங்கள் குனிந்த தலையுடனும் இதயத்துடனும் வரவேற்றோம். இந்த பயணத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. இது ஆரம்பம் மட்டுமே எங்கள் வாழ்க்கை நிரந்தரமானது என்று எங்களுக்குத் தெரியும். - சோனம் மற்றும் ஆனந்த்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.