சோனா எமோஷனல் அறிக்கை - இது கவர்ச்சிப் படம் இல்ல

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பூவெல்லாம் உன் வாசம்',  'ஷாஜகான்', 'குசேலன்', 'கோ' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகை சோனா. இந்நிலையில் அவர் தற்போது மலையாளத்தில் 'பச்சமாங்கா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

Actress Sona release a statement about her Movie Pachamanga

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை சோனா கிளாமராக நடித்துள்ளதாக செய்திகள் வெளியானது.  இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சோனா தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், ''பச்சமாங்கா' படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் டிரெய்லரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல.

கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்" என்றார்.

சோனா எமோஷனல் அறிக்கை - இது கவர்ச்சிப் படம் இல்ல வீடியோ

மற்ற செய்திகள்

Actress Sona release a statement about her Movie Pachamanga

People looking for online information on Pachamanga, Prathap Pothan, Sona will find this news story useful.