"எந்த உறுப்பை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்கீங்க?" - "அதுவா.." ரசிகருக்கு ஸ்ருதி ஹாசன் பதில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: தனது உடலில் நடந்த பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து ஸ்ருதிஹாசன் பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

ஸ்ருதி ஹாசன் கடைசியாக தமிழில் எஸ்பி ஜனநாதனின் கடைசி படமான 'லாபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த லாபம் திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஊரடங்கு காலத்தை சமூக வலை தளங்களில் செலவு செய்த நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ சூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் செசனை நடிகை ஸ்ருதிஹாசன் நடத்தினார். அதில் ரசிகர்களிடம் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக ஆண் நண்பர், பிடித்த இசைக்கருவி, பிடித்த இடம், பிடித்த நபர்கள், தமழில் பேசுவது, தெலுங்கில் பேச சொல்லுதல், திருமணம் எப்போது  போன்றவைகளும் அடங்கும்.

மேலும் ஒரு ரசிகர், ஸ்ருதி ஹாசனிடம் "உங்கள் உடல் உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பாகம் எது?" என கேட்ட கேள்விக்கு, இது உங்களுடைய வேலை இல்லை எனக்கூறிவிட்டு பின் "மூக்கு" என பதில் அளித்தார்.

தற்போது ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது.

மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.

அடுத்ததாக ஸ்ருதிஹாசன் தற்போது 'NBK 107' என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாக உள்ளது. 'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும்.

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார். இதனை சிரஞ்சீவி டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Actress shruthi haasan talks about plastic surgery

People looking for online information on Plastic Surgery, Shruthi Haasan, Sruthi Haasan will find this news story useful.