பிரபல நடிகை ஷோபனா தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசினார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக பிசியாக வலம் வந்தவர் ஷோபனா. மலையாளத்தில் இவர் நடித்த மணிச்சித்திரதாழ் படம் மூலம் இவர் பிரபலமானார். மேலும் இவர் ரஜினி ஜோடியாக தளபதி படத்தில் நடித்து, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இது மட்டுமின்றி பரதநாட்டிய கலையில் தேர்ந்தவரான ஷோபனா, அதிலும் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஷோபனா தனது சினிமா பயணம் குறித்து நம்மிடம் மனம் திறந்து பேசினார். அப்போது அவர், சிவா படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், ரஜினி ஷோபனாவின் காலை பிடிக்கும் ஒரு சீனில் நடிக்க தயங்கினாராம்..! அது என்ன என்பது குறித்தும், ரஜினி - மணிரத்னமுடன் தளபதி படத்தின் அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். மேலும் போடா போடி படத்தில் நடித்தது பற்றியும், பரதநாட்டிய கலை குறித்து அவர் உற்சாகமாக பேசினார்.
இதுகுறித்து நடிகை ஷோபனா பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ.,