அடி தூள்.. RJ பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: R J பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படத்தில் பிரபல இளம் தமிழ் நடிகை நடிக்க உள்ளார்

Advertising
>
Advertising

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இவர் முக்கிய வேடத்தில் நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கவும் செய்கிறார்.

இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த ரீமேக் படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோயமுத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் நடந்து முடிந்தது, இந்த 2022 ஆம் ஆண்டு  இந்த படம் திரைக்கு வருவதாக ஆர் ஜே பாலாஜி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் R J பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நடிக்க உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஷிவானி VJS46 படத்தில் ஷிவானி விஜய் சேதுபதியுடன் போலிசாக நடிக்கிறார். மேலும் நடிகை ஷிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் முன்பே நடித்து முடித்துள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actress Shivani Narayanan Joining hands with RJ Balaji

People looking for online information on Bigg boss, Biggboss, LKG, Mookuthi Amman, R J Balaji, Shivani Narayanan, Vikram, VJS46 will find this news story useful.