”நான் ஹோம்லியா நடிச்சா யாருப்பா பாப்பா?”… "வீட்டுக்குள்ள விடல"… நடிகை ஷர்மிலி OPEN TALK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90 களில் பல படங்களில் கவர்ச்சி மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷர்மிலி…

Advertising
>
Advertising

Also Read | அம்மாவக் கோபப்படுத்தி செம்மயா திட்டு வாங்கின "அசுரன்" கென் … அப்படி என்ன செஞ்சாரு..?

90 களில் கவர்ச்சி மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கலக்கியவர் நடிகர் ஷர்மிலி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் தான் சந்தித்த பிரச்சனைகள், கிளாமர் வேடங்களில் மட்டும் நடித்தது ஏன், நடிகர் கவுண்டமணியோடு தொடர்ந்து நடித்த படங்கள் என பல விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

வீட்டுக்குள் விடாத சம்பவம்…

இந்த பேட்டியில் அவர் “நான் முதலில் பல படங்களில் கவர்ச்சி வேடங்களில்தான் நடித்தேன். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலைக்கார வேடத்துக்காக புடவை கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்கள். அப்போது நானும் இன்னொரு நடிகையும் கிராமத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் உடை மாற்றிக் கொள்ள சென்றோம். ஆனால் அந்த வீட்டுக்காரர்கள் எங்களை சினிமாக்காரர்கள் என்று உள்ளே விட மறுத்து திட்டி விட்டார்கள். என் கூட வந்த நடிகை ‘ஏன் சினிமாக் காரங்கன்னா என்னா ஷூட்டிங் பாக்க வந்தீங்கள்ல’ எனக் கேட்டுவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

கிளாமர் வேடம் ஏன்…

தொடர்ந்து கிளாமர் வேடங்களில் மட்டுமே நடித்தது ஏன் எனக் கேட்டபோது “நான் மூடிகிட்டு நடிச்சா யாருப்பா பாப்பா. யாருமே கிளாமர் ரோல் விரும்பி பண்றதுல்ல. ரசிகர்கள் பாக்கணும்ல. என் உடலே கொஞ்சம் செக்ஸியானது. நான் புடவைக் கட்டினாலே செக்ஸியாக இருக்கும். இயக்குனர்கள் எல்லொருமே ஷர்மிலியா கிளாமர் வேடம் குடு… புடவைய கிளாமரா கட்ட சொல்லு. துணி துவைக்குற மாதிரி சீன் வை என சொல்லிவிடுவார்கள்” என தனக்கு வழங்கப்பட்ட வேடம் குறித்து பேசியுள்ளார்.

தடம் மாறிய வாழ்க்கை…

மேலும் நடிப்பதற்காக வந்தது குறித்து பேசும்போது “நான் டான்ஸராகதான் வந்தேன். பிரபுதேவா மாஸ்டரோடு உதவியாளராக பணியாற்றினேன். பல படங்களில் நான் பணியாற்றியுள்ளேன். ரஜினி சாரின் தர்மதுரை படத்தில் பணியாற்றியுள்ளேன். ரஜினி சாருக்கே சொல்லிக் கொடுத்தேன். அப்படியே சில படங்களில் கவர்ச்சி நடனங்கள் ஆடினேன். சில படங்களில் பாட்டோடு சேர்த்து நகைச்சுவை காட்சி நடித்தேன். அப்படிதான் கவனிக்கப்பட்டேன். பின்னர் சில படங்களில் இப்படி நடித்து முழுமையாக நடிப்புக்கு மாறியுள்ளேன்.” எனக் கூறியுள்ளார். இதுபோல இன்னும் பல விஷயங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

”நான் ஹோம்லியா நடிச்சா யாருப்பா பாப்பா?”… "வீட்டுக்குள்ள விடல"… நடிகை ஷர்மிலி OPEN TALK! வீடியோ

Actress sharmili talked about her glamour roles

People looking for online information on Sharmili, Sharmili Recent Interview, Sharmili talked about her glamour roles will find this news story useful.