"சினிமாவில் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா?".. "மாப்ள பாத்தாச்சா?".. ஷாலு ஷம்மு பதில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெகிடி, மிஸ்டர் லோக்கல், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

actress Shalu Shamu viral answers to fans in instagram

தம்முடைய சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது நேரலையில் பேசிவரும் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் வழியே ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்திருந்தார். இதில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக அநாகரிகமாக பேசிய ரசிகர் ஒருவருக்கு துணிச்சலான பதிலும் ஷாலு கொடுத்திருக்கிறார். இந்த பதிலும் வைரலாகி வருகிறது.

actress Shalu Shamu viral answers to fans in instagram

அப்போது ரசிகர் ஒருவர் திரைத்துறையில் பெண்களுக்கு சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருப்பது  உண்மைதானா என்று கேட்க அதற்கு பதிலளித்த ஷாலு ஷம்மு,  “ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தோன்றும் ஒருவரின் முடிவை இன்னொருவர் தலையிட்டு கட்டாய படுத்தவோ, வலியுறுத்தவோ முடியாது. ஒவ்வொருவருக்கும் தங்களுடைய முடிவை எடுப்பதற்கான உரிமை உண்டு!” என்று தெரிவித்திருக்கிறார்.

அதன்பின்னர் இன்னொருவர் மிகவும் அநாகரிகமான முறையில் உடல் அங்கங்களை பற்றி கேள்வி எழுப்ப அதற்கும் நெத்தியடி பதிலாக துணிச்சலுடன் பதில் கூறியிருக்கிறார். இந்த பதிலும் பல ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படி சில ரசிகர்கள் கேள்வி எழுப்பும் போது என்ன செய்வீர்கள் என்று இன்னொரு தரப்பினர் கேட்கும்போது பொதுவாக இப்படியான கேள்விகளை கேட்பவர்களை கடந்து போய் விடுவதாகவும், ஆனால்  இவர்கள் ஏன் தங்களுடைய சொந்த ஐடி மூலம் வராமல் ஃபேக் ஐடி மூலம் வருகின்றனர் என்பதை தான் முதலில் கேட்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதேபோல் இன்னொரு ரசிகர் ஒருவர் மாப்பிள்ளை பார்க்கிறார்களா? என்று கேட்டபோது அதற்கு வெட்கத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஆமாம் என்று கூறியிருக்கிறார். மறைந்த நடிகை சித்ராவின் நெருங்கிய தோழியான ஷாலு ஷம்முவிடம் சித்ரா பற்றி கேட்டபோது கூட சித்ராவை இன்னும் தான் மறக்க வில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.  இதேபோல் டைம் மெஷின் ஒன்று கிடைத்தால் கடந்த டிசம்பர் மாதத்துக்கு சென்று தன்னுடைய அப்பாவை மரணத்திலிருந்து தடுத்து இருப்பேன் என்றும் அவர் உருக்கமாக கூறியிருக்கிறார்.

"சினிமாவில் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா?".. "மாப்ள பாத்தாச்சா?".. ஷாலு ஷம்மு பதில்ஸ்! வீடியோ

Actress Shalu Shamu viral answers to fans in instagram

People looking for online information on Shalu Shamu will find this news story useful.