பகல்நிலவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை சமீரா செரீஃப் தனது குழந்தையை வைத்து பல யுடியூப் வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து வருகிறார்.
Also Read | Get Ready… வெள்ளித்திரையில் ஒரு புதிய சகாப்தம்…. KGF தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட exciting update!
ரீல் ஜோடி to ரியல் ஜோடி…
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியலின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் சையத் அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப் ஆகியோர் திருமணம் செய்துக் கொண்டனர். 4 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இருவரும், தங்களது காதல் குறித்து வெளிப்படையாகவே அறிவித்தனர். ரியல் காதலர்களான அன்வர், சமீரா இருவரும் இணைந்து நடித்த ‘பகல் நிலவு’ சீரியல் ஹிட்டான நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘பகல் நிலவு’ சீரியலில் இருந்து இருவரும் பின்னர் விலகினர். சமீரா ரெக்க கட்டி பறக்குது உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
திருமணமும் குழந்தையும்…
இந்நிலையில், காதலர்களாக இருந்த அன்வர் - சமீரா ஜோடி ஹைதராபாத்தில் இஸ்லாமிய முறைப்படி இருவீட்டாரின் முன்னிலையில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர். ஆடம்பரம் இல்லாத எளிமையாக நடந்த இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு அர்ஹான் என்ற ஆண் குழந்தை உள்ளது.
யுடியூபில் கலக்கும் தம்பதிகள்…
இந்நிலையில் சமீரா மற்றும் அன்வர் தம்பதிகள் தங்கள் யுடியூப் சேனலில் தங்கள் குழந்தையை வைத்து நிறைய வீடியோக்களைப் பகிர அவைக் கவனிக்கப்பட்டன. ஆனால் அதிலும் அவர்களை விமர்சிக்கும் விதமாக “ஏன் இப்படி குழந்தையை வச்சு பிச்சை எடுக்கிறீர்கள்… உங்களுக்கு மட்டும்தான் குழந்தை இருக்கா” என்ற மோசமான விமர்சனங்களை வைத்தனர். இந்த கமெண்ட்கள் குறித்து நடிகர் அன்வர் “உங்கள் எல்ல மோசமானக் கமெண்ட்களையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளோம். உங்களுக்கு இந்த ஒரு முறைதான் வாய்ப்பு. நீங்களே மன்னிப்புக் கேட்டுவிட்டால் முடிந்தது. ஆனால் மீண்டும் தொடர்ந்தால் சைபர் கிரைம் போலீஸுக்கு செல்வோம்” எனக் கண்டிப்போடு கூறியிருந்தார்.
சமீராவின் வீடியோ கண்டனம்…
இந்நிலையில் இதுபோன்ற கமெண்ட்ஸ்களுக்கு பதிலளிக்கும் விதமாக சமீரா இப்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “நாம் அனைவரும் இங்கு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கதான் உள்ளோம். ஆனால் நீங்கள் என்னை இழிவு செய்ய நினைத்தால் இதுவரை நான் பொறுமையாக இருந்தது போல அமைதியாக இருக்கமாட்டேன். நாங்கள் சைபர் கிரைம் போலீஸிடம் புகார் அளிக்க உள்ளோம். எங்களை இழிவு செய்ய நினைப்பவர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் டைப் செய்யும் முன்னர் யோசியுங்கள்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8