SAMANTHA : டாப் ட்ரெண்டிங்கில் சமந்தா.. FANS -க்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி POST..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தாவின் ட்வீட் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌. விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார். தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது. சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார்.

இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் ட்விட்டரில் #13PhenomenalYrsOfSamantha எனும் ஹேஷ்டாக் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதுகுறித்து சமந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"இந்த அன்பை நான் உணர்கிறேன்... அதுதான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது... இப்போதும் என்றும், நான் என்னவாக இருக்கிறேன் என்பது உங்களால் தான். 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் நாம் இப்போதுதான் தொடங்குகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Tags : Samantha

தொடர்புடைய இணைப்புகள்

Actress Samantha Tweet after 13 years of Samantha trending

People looking for online information on Samantha will find this news story useful.