இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தாவின் கோவா சுற்றுலா புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா கோவாவில் சுற்றுலா செய்து எடுத்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

Advertising
>
Advertising

சமந்தா - The Rise

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

யோகி பாபு வீட்டில் விசேஷம்.. ஓடி வந்த சிவகார்த்திகேயன் என்ன பண்ணாருன்னு தெரியுமா?

சமந்தாவின் அடுத்த படங்கள் 

விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.

கோவா சுற்றுலா 

இந்நிலையில் நடிகை சமந்தா, சினிமா இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டு கோவாவில் தனது நண்பர்களுடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடி வருகிறார். நடிகை ஷில்பா ரெட்டி மற்றும் வாசுகியுடன் கோவா வந்த நடிகை சமந்தா சுற்றுலா புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் டிரெய்லர் எப்போ ரிலீஸ்! வினியோகஸ்தர் கொடுத்த சரவெடி UPDATE!

யசோதா 

புகழ்பெற்ற ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில், நடிகை  சமந்தா,  ‘யசோதா’ படத்தில் எழுத்தாளாராக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். திறமை மிகு இளம் இணைகளான  ஹரி - ஹரிஷ் கூட்டணி இப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில்ல்ல் துவங்க உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Samantha shares latest viral vacation pictures of her

People looking for online information on Goa, Samantha, Shilpa Reddy will find this news story useful.