நடிகை சமந்தா தன்னை பற்றி வந்த மீமை நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறார். இவர் தமிழில் அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மீமை பகிர்ந்துள்ளார். அவர் யோகா செய்து வெளியிட்ட புகைப்படத்தை வைத்து, ஸ்பைடர்மேனுக்கு பதிலாக வடிவமைக்கப்பட்ட மீமை பகிர்ந்துள்ள சமந்தா, ''மற்றவர்களை பார்த்து சிரிக்கும் பொழுது, நம்மை பார்த்தும் சிரித்துகொள்ள தெரிய வேண்டும்'' என பதிவிட்டுள்ளார் இவர். அண்மையில் தலைகீழாக நின்றபடி சமந்தா வெளியிட்டு வரும் யோகா போஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.