"இவங்க கால் தரை'ல படல.." என்னம்மா வொர்க் அவுட் பண்றாங்க சமந்தா.. FANS-ஐ மிரள வைத்த வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தா இணைந்து நடித்திருந்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம், நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) வெளியாகி இருந்தது.

Advertising
>
Advertising

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், சமந்தாவின் பிறந்தநாளில் வெளியாகி இருந்தது சிறப்பம்சமாகும்.

அதே போல, கதீஜா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சமந்தாவின் நடிப்பும், ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

சமந்தாவுக்கு கிடைத்த அமோக வரவேற்பு

நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்திருந்த சமந்தா, கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்திருந்தார். இதனிடையே, அவரது நடிப்பில் வெளியாகி இருந்த ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 உள்ளிட்டவை, சமந்தாவிற்கு அதிக அளவில் வரவேற்பினை பெற்றுக் கொடுத்திருந்தது.

ஒ அண்ட்டா வா மாவா..

அதே போல, கடந்த டிசம்பர் மாதம், தெலுங்கு மொழியில் இருந்து பேன் இந்தியா படமாக உருவாகி இருந்த 'புஷ்பா' திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்தார். இதில், 'ஒ அண்ட்டா வா மாவா' என்ற பாடலில் மட்டும் நடிகை சமந்தா தோன்றி நடனமாடி இருந்தார். இந்தியா முழுக்க, இந்த பாடல் பல மொழிகளில் ஹிட்டடித்து, சமந்தாவையும் அதிக அளவில் வைரலாக்கி இருந்தது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தினை தொடர்ந்து, 'ஷகுந்தலம்', 'யசோதா', பாலிவுட்டில் ஒரு படம், விஜய் தேவரகொண்டாவுடன் புதிய படம் என படு பிசியாக சமந்தா நடித்து வருகிறார். திரைப்படங்களில் எந்த அளவுக்கு பிசியாக நடித்து வந்தாலும், அடிக்கடி வொர்க் அவுட்டில் ஈடுபடவும் சமந்தா தவறுவதில்லை.

வொர்க் அவுட்டில் செம பிசி..

சமீப காலமாகவே, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போட்டோஷூட் மற்றும் படம் தொடர்பான அப்டேட்கள் நடுவே பல வொர்க் அவுட் வீடியோக்கள் தான் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், சமந்தாவின் புதிய வொர்க் அவுட் வீடியோ ஒன்றும் தற்போது அதிக அளவில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில், கால்களின் உதவி இல்லாமல் கையை மட்டுமே பயன்படுத்தி ஏணி ஒன்றின் மீது ஏறுகிறார் சமந்தா. இந்த வீடியோவைக் கண்ட ரசிகர்கள் பலரும், சமந்தாவை வியந்து பார்த்து வருகின்றனர். மேலும், அவரது விடா முயற்சியையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சமந்தாவின் வொர்க் அவுட் வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

Samantha workout video link : 

https://youtube.com/shorts/B9-ObzFowcM?feature=share

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

"இவங்க கால் தரை'ல படல.." என்னம்மா வொர்க் அவுட் பண்றாங்க சமந்தா.. FANS-ஐ மிரள வைத்த வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress samantha new work out video fans amazed

People looking for online information on Fitness, Kaathuvaakula Rendu Kadhal, Nayanthara, Samantha ruth prabhu, Samantha Workout, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.