மீண்டும் திருமண வாழ்வில் சமந்தா நாக சைதன்யா ஜோடி? அடிப்படை காரணம் இது தான் போல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் பரவியுள்ளது.

Advertising
>
Advertising

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ படங்களில் நடித்து வருகிறார்.

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவரும், நாக சைதன்யாவும் ஒருவரையொருவர் காதலித்து 2017 இல் திருமணம் செய்தனர். அதன் பின்னர் இந்த ஜோடி ரசிகர்களிடம் பிரபலமான ஒன்றாக மாறியது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர்.

வாடகை தாய் மூலம் குழந்தை? திடீரென அறிவிப்பு செய்த உலக அழகி பிரியங்கா சோப்ரா! முழு தகவல்

மேலும் இருவரும் தனி தனி பாதைகளில் பயணம் செய்யப்போவதாகவும், மேலும் மீடியா, ரசிகர்கள் இந்த கடினமான காலத்தில், எங்கள் பிரைவசியை மதிக்குமாறும் நடிகை சமந்தா கேட்டுக்கொண்டார். இருவரும் பிரிந்ததாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை இதுகுறித்து தெரிவித்து வந்தனர்.

சமீபத்தில் நாக சைதன்யா ஒரு பிரபல முன்னணி சேனலில் பேட்டி அளித்தார். அதில், சமந்தாவின் மகிழ்ச்சியே தனக்கும் மகிழ்ச்சி என்றும், சமந்தாவும் தானும் இப்பவும் நல்ல நண்பர்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கத்தில் விவாகரத்து குறித்து அறிவித்த பதிவை நீக்கி உள்ளார். இதனால் நெட்டிசன்கள் சமந்தா நாக சைதன்யா மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறிவருகின்றனர்.

KGF-2 உடன் மோதுவது உறுதி.. சொன்ன தேதிக்கு படத்தை ரிலீஸ் பன்றோம்! பரபர அறிக்கை விட்ட ஆமிர்கான்

மீண்டும் திருமண வாழ்வில் சமந்தா நாக சைதன்யா ஜோடி? அடிப்படை காரணம் இது தான் போல! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Samantha Naga Chaitanya Divorce Issue New Twist

People looking for online information on Actress Samantha, சமந்தா, நாக சைதன்யா, Naga chaitanya will find this news story useful.