சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ படங்களில் நடித்து வருகிறார்.
சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வரும் சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அதன் பின் தற்போது டீரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. ஆனால் இம்முறை பிரிட்டிஷ் படத்தில் நடிக்க உள்ளார். உலகப் புகழ் பெற்ற இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் டிடெக்டிவ் ஆக நடிக்க உள்ளார். Bi Sexual கதாபாத்திரத்தில் இதில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு அரெண்ஜ்மெண்ட் ஆஃப் லவ் என பெயரிடப்பட்டு உள்ளது.
இது குறித்து நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார், அதில் “ஒரு புதிய உலகம்! நான் கடைசியாக 2009 ஆம் ஆண்டு யே மாயா சேசேவுக்காக ஆடிஷன் செய்தேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஆடிஷன் செய்தபோது, நான் அதே பதட்டத்தை உணர்ந்தேன்... BAFTA விருது பெற்ற, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, உங்களுக்கு மிகவும் பிடித்த தொடரான 'Downton Abbey'-ன் இயக்குனருக்கான ஆடிஷனில் கலந்து கொண்டேன். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறேன் சார். #PhilipJohn வாய்ப்புக்கு நன்றி @sunitha.tati @gurufilms1... இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியாது!!!" என குறிப்பிடப்பட்டுள்ளாந்த
இந்த படம் ‘Arrangements of Love’ இந்திய எழுத்தாளர் டைமேரி என். முராரியின் அதிகம் விற்பனையான ‘Arrangements of Love’ 2004 நாவலின் தழுவலாகும்.