சமந்தா தான் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Also Read | சிவகுமார் வீட்ல டீ, காபி கிடைக்காது.. இதான் கிடைக்கும்.." - Oh My Dog விழாவில் விஜயகுமார்!
தமிழ் தெலுங்கு சினிமா பயணம்…
விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தெறி ஹிட் புஷ்பா பாடல்…
தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம், ‘'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.
ஜிம்மில் workout…
சமூகவலைதளங்களின் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்ந்து வருபவர். ரசிகர்களோடு கேள்வி பதில் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்பவர். இப்படி எப்போதும் ரசிகர்களோடு தொடர்பில் இருக்கும் சமந்தா இப்போது பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர், அதில் “ வலிமையான மனம். 2022-2023 ஆம் ஆண்டு எனக்கு உடல் ரீதியாக கடுமையான உழைப்பைக் கோரக்கூடியதாகவும், சவாலானதாகவும் இருக்க போகிறது. அதைக் கொண்டுவருவதற்கான நேரம். ஒரு நேரத்தில் ஒரு ஸ்டெப்” எனக் கூறியுள்ளார்.
Also Read | இயக்குநராக துடிக்கும் இளைஞர்களுக்காக வெற்றிமாறனின் புதிய முயற்சி… குவியும் வாழ்த்து