நடிகை சமந்தா தற்போது பகிர்ந்துள்ள டிவீட்கள் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.
Also Read | ரொம்ப நாள் கழிச்சு இந்தி படத்துல…. ’ராக்ஸ்டார்’ அனிருத் பகிர்ந்த வைரல் story !
10 ஆண்டுகளுக்கு மேலான வெற்றிப் பயணம்…
சென்னைப் பெண்ணான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து அவர் இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். தற்போது திரைப்படங்களில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார்.
அடுத்த படங்கள்…
தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம், ‘'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான ’புஷ்பா தி ரைஸ்’ படத்தின் ’ஒ அண்ட்டா வா மாவா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.
சமந்தாவின் வைரல் tweet…
சமந்தா எப்போதும் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள ஒரு டிவீட் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் “ எப்போதும் என்னுடைய அமைதியை அவமதிப்பு என்று தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்… என்னுடைய மௌனத்த்தை சம்மதம் என்று புரிந்து கொள்ளாதீர்கள்… என்னுடைய அன்பை என் பலவீனம் என்று புரிந்து கொள்ளாதீர்கள்” என்று கூறியுள்ளார். மேலும் அதே டிவீட்டை பகிர்ந்து “அன்புக்கும் ஒரு எக்ஸ்பயரி தேதி உண்டு… #justsaying” எனக் கூறியுள்ளார். திடீரென்று எதற்காக இப்படி ஒரு டிவீட்டைப் பகிர்ந்துள்ளார் என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8