”வேல முடிஞ்சிடுச்சு… ரொம்ப EXCITING-ஆ இருக்கு”… அடடே.. சமந்தா பகிர்ந்த செம தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினரோடு இருக்கும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ள நிலையில் அது இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ”எல்லா செண்டர்லயும் பீஸ்ட் கொண்டாட்டம்”… சன் பிக்சர்ஸ் பகிர்ந்த மாஸ் poster!

நயன்தாரா- விஜய் சேதுபதி – சமந்தா

நயன்தாரா- விஜய் சேதுபதி – சமந்தா ஆகிய மூன்று முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டைட்டானிக் போஸ்டர் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

கண்மணி- ராம்போ – காதீஜா…

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது விஜய் சேதுபதி இருவரையும் காதலிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது சமீபத்தில் வெளியான டீசரில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரிடமும் விஜய் சேதுபதி தனது காதலை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் அறிவித்தனர்.

சமந்தா பகிர்ந்த புகைப்படம்…

தமிழில் சமீபத்தில் அதிகளவில் படங்களில் நடிக்காத சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தைப் பற்றி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களைப் பகிர்ந்து படத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தார் சமந்தா.

தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக அறிவித்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் குழுவினரோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் ”காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் நிறைவடைந்தது. மிகவும் ஆவலோடும் எதிர்பார்ப்போடும் இந்த படத்தை உங்களிடம் காட்ட உள்ளோம். என்னை சுற்றி இருக்கும் இந்த அபூர்வமான மனிதர்கள் இந்த படத்தில் வேலை செய்வதை மிகவும் எளிமையாக்கியவர்கள். அனைவருக்கும் எனது அன்பு” எனக் கூறியுள்ளார்.

Also Read |  "பேய் மாதிரி எடுத்துருக்காங்க"…"ஜூம் பண்ணிக் காட்டுங்க இன்னும் புல்லரிக்குது"… KGF 2 public review

தொடர்புடைய இணைப்புகள்

Actress Samantha completed the dubbing for KVRK viral pic

People looking for online information on KVRK Dubbing, KVRK movie, Nayanthara, Samantha, Vignesh Shiva, Vijay Sethupathi will find this news story useful.