திருமண முறிவுக்கு பிறகு தனது பெயரை மாற்றிய நடிகை சமந்தா! முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா, தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக விளங்குபவர். சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்டவர். 

ACTRESS SAMANTHA CHANGING HER NAME AGAIN ON TWITTER

இவர் மாஸ்கோவின் காவேரி படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், தெறி, கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல், குணசேகர் இயக்கத்தில் சகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். 

ACTRESS SAMANTHA CHANGING HER NAME AGAIN ON TWITTER

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும்போது சமந்தாவும்,  நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் காதல் வயப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் 2017ல் கிறிஸ்தவ முறைப்படியும் இந்து மத முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை சமந்தா கடந்த சனிக்கிழமை ஒரு பரபரப்பான அறிக்கையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த அறிக்கையில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.மேலும் இருவரும் தனி தனி பாதைகளில் பயணம் செய்யப்போவதாகவும், மேலும் மீடியா, ரசிகர்கள் இந்த கடினமான காலத்தில், எங்கள் பிரைவசியை மதிக்குமாறும் நடிகை சமந்தா கேட்டுக்கொண்டார்.

இந்த திருமணமுறிவு பற்றி பல வதந்திகள் பரவி வந்தன. அதில் முக்கியமான வதந்தி, சமூக வலைதளங்களில் நடிகை சமந்தா தனது முன்னாள் கனவர் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை தனது பெயரில் இருந்து நீக்கி வெறும் 'S' என்று மட்டும் வைத்திருந்தார். இதனை வைத்து திருமண முறிவு பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. 

இந்நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைதள கணக்குகளில் மீண்டும் பெயரை மாற்றியுள்ளார். இப்பொழுது அவரது கணக்குகளின் புதிய பெயராக மீண்டும் சமந்தா என்று மாற்றப்பட்டுள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ACTRESS SAMANTHA CHANGING HER NAME AGAIN ON TWITTER

People looking for online information on Naga chaitanya, Samantha will find this news story useful.