சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் நடிகை சாய் பல்லவி.. கூட இந்த நடிகை வேற இருக்காங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சாய்பல்லவி சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இராவண அசுரா.‌. 'விக்ரம் வேதா' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் போஸ்டர்.. சும்மா தீய்யா இருக்கு

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.

ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்கி திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சாய் பல்லவியின் நடிப்பு இந்த திரைப்படங்களில் முக்கிய அம்சமாக அமைந்தது.

சாய்பல்லவி அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தன்னுடைய குடும்பத்துடன் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சாய் பல்லவி, சில தினங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சாய் பல்லவியுடன் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய தங்கையும் நடிகையுமான பூஜா கண்ணன் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.

பராந்தகனின் தங்க கூரை பின்னணியில் கோயிலின் முதல் தள பால்கனியில் நின்று எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா கண்ணன் பகிர்ந்துள்ளார்.

Also Read | Ponniyin Selvan : "அருண்மொழி வர்மனாக கமல்.. வந்தியத்தேவனாக ரஜினி" - அப்பவே சொன்ன சிவாஜி

தொடர்புடைய இணைப்புகள்

Actress Sai Pallavi Visited Chidambaram Natarajar Temple

People looking for online information on Sai Pallavi, Sai Pallavi Visits Chidambaram Natarajar Temple will find this news story useful.