"வாழா என் வாழ்வை வாழவே.." புது ரூட் எடுக்கும் நடிகை சதா.. வைரலாகும் REELS வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"போயா.. போ, போ" என்ற வசனத்தைக் கேட்டாலே நம் பலருக்கும் நினைவுக்கு வருவது அதனை ஜெயம் படத்தில் பேசிய நடிகை சதாவைத் தான்.

Advertising
>
Advertising

ஜெயம் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சதா, அந்நியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆகி விட்டார்.

தமிழ் மட்டுமில்லாமல், தனது திரை பயணத்தை ஆரம்பித்த தெலுங்கு மொழியிலும், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நிறைய படங்கள் நடித்துள்ளார் சதா.

அடுத்தடுத்து திரைப்படங்களை சுற்றி இயங்கி வந்த நடிகை சதா, கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'டார்ச் லைட்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர், திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் சதா, தனது கவனம் முழுவதையும் மற்றொரு பக்கம் திருப்பி உள்ளார்.

"இப்போ வேற ரூட்டு"..

தனது சமூக வலைத்தளத்தில், எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா, அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும், ஜாலியான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அது மட்டுமில்லாமல், சமீப காலமாகவே சமையல், பயணம், போட்டோகிராஃபி என தனது வாழ்க்கையை வேறொரு பரிமாணத்துக்கு கொண்டு சென்றுள்ளார் நடிகை சதா.

சதா பகிர்ந்த வீடியோ

இது தொடர்பாக, தான் பயணம் செய்யும் பல வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் சதா பகிர்ந்த ஒரு வீடியோவும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள பென்ச் தேசிய பூங்கா அருகேயுள்ள கிராமம் ஒன்றில் தனது கையில் கேமராவுடன் பயணம் செய்யும் வீடியோ ஒன்றை சதா பகிர்ந்துள்ளார். மேலும், அதன் கேப்ஷனில், "வாழ்கையியில் சிறந்த அனுபவங்கள், திட்டமிடப்படாமல் வருகின்றன" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress sadha wild life journey latest reels video

People looking for online information on Cooking, Photography, Sadha will find this news story useful.