திருமணத்துக்கு பிறகு மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா.. வெளியான ப்ரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி சீரியல்  நடிகை ரித்திகா சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

Actress Ritika Tamilselvi Back to Baakiyalakshmi Serial
Advertising
>
Advertising

Also Read | வாரிசு இசை நிகழ்ச்சியில் ஓடி வந்து உதவிய விஜய்.. நெகிழ்ச்சியில் பாடகி சொன்ன விஷயம்!! வீடியோ

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களுள் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா தமிழ் செல்வி.

இவர் விஜய் டிவி பிரபலமான வினு என்பவரை சில நாட்களுக்கு முன் எளிமையான முறையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்  கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் நடந்த பின்னர் கணவருடன்  சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். ரித்திகா, "கடவுளின் ஆசிர்வாதத்துடன் வினு நாராயண் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இனி, தான் திருமதி.வினு ஆகிவிட்டதாகவும் பதிவிட்டு, அனைவரின் அன்பும் ஆசியும் தங்களுக்கு வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் செய்யும் போட்டியாளராக கலந்து கொண்ட ரித்திகா அதன் பின்னர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பல விதமான கெட்டப்புகளை போட்டு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியலின் படப்பிடிப்பில் இரு தினங்களுக்கு முன் ரித்திகா கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த வார பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. எழில் & அமிர்தா காதல் காட்சிகளை அடிப்படையில் இந்த ப்ரோமோ வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன. அமிர்தா தனது காதல் குறித்து பாக்கியலட்சுமியிடம் உரையாடுவது போல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Also Read | மனைவியுடன் வெளிநாட்டில்.. இது தல கிறிஸ்துமஸ்.. புதுமாப்பிள்ளை ஹரிஷ் கல்யாண்.. 😍

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Ritika Tamilselvi Back to Baakiyalakshmi Serial

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Ritika Tamilselvi will find this news story useful.