VIDEO: தவறி விழுந்த ரித்திகா சிங்... ஆனாலும் KICK BOXING CLASS-ல் செய்த அட்ராசிட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவனுடன் இணைந்து இறுதிச்சுற்று திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்தவர் நடிகை ரித்திகா சிங்.

பாக்சிங் போட்டியை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தை சூரரைப் போற்று படத்துக்கு முன்னதாக சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் மாதவன் பாக்ஸிங் கோச்சாக வருவார். முதலில் அவருடன் முரண்டு பிடிக்கும் மாணவியாகவும் பின்னர் மாஸ்டர் மீது காதல் கொள்ளும் மாணவியாகவும் நடித்து அசத்தியிருப்பார் ரித்திகா சிங்.

இந்த படத்தில் அவர் கச்சிதமாக பொருந்துவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவரும் அடிப்படையில் பாக்ஸிங் பழகுபவர் என்பதுதான். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கத் தொடங்கிய ரித்திகா சிங் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அதிக ரசிகர்களைக் கவர்ந்தார்.


உண்மையில் அவர் பாக்ஸிங் பழகும் விதத்தை நாம் வீடியோக்களில் பார்த்தால் மிகவும் க்யூட்டாக இருக்கும். அவர் அவ்வப்போது அந்த வீடியோக்களை எடுத்து தம் சமூகவலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். அப்படி தான் தற்போது

ஒரு வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ரித்திகா சிங் அந்த வீடியோவில் கிக்பாக்ஸிங் பயிற்சி எடுக்கிறார். இந்த பயிற்சியின் போது நடந்த அட்ராசிட்டிகள் தான் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அதில் டீச்சர் பயங்கரமாக சொல்லித்தருகிறார். ஆனால் நான் அதையே செய்யும் போது எப்படியெல்லாம் கஷ்ட படுகிறேன் தெரியுமா? என்று வீடியோவுடன் எழுதி பதிவிட்டிருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் ஒரு கிக் பாக்சிங் போஸை முயற்சி பண்ணும் போது தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். அத்துடன் கால்கள் காயப் பட்டுவிட்டதாகவும் மூச்சுவிட கூட முடியவில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

சற்றே சீரியஸாக சென்ற இந்த ஒர்க் அவுட் செஷனை ஒருவழியாக நகைச்சுவையாகவும் கலாட்டாவாகவும் ரித்திகா சிங் செய்து முடித்திருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

VIDEO: தவறி விழுந்த ரித்திகா சிங்... ஆனாலும் KICK BOXING CLASS-ல் செய்த அட்ராசிட்டி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Ritika singh get hurts boxing practice video

People looking for online information on Ritika singh will find this news story useful.