நடிகை ராஷ்மிகா மந்தனா டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பிரபல நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
இந்திய சினிமாவில் பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.
பின்னர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்ததன் மூலமும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார்.
தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா படத்தில் நடித்து இருந்தார். தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
ஐத்ராபாத்தில் தற்போது நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை அண்மையில் பகிர்ந்தார்.மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கும் குட்பாய் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள டெல்லி சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இம்பீரியல் ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கிருந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த இம்பீரியல் ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை மட்டும் இந்திய பண மதிப்பில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
உலக அளவில் இந்த ஹோட்டல் புகழ் பெற்றது ஆகும். மிகப் பழமையான ஐந்து நட்சத்திர விடுதிகளில் இந்த ஹோட்டலும் இடம் பெற்றுள்ளது.