என்னது? அடுத்த தரமான செய்கையா 'இது' இருக்குமா? - நம்ம 'ஸ்ரீவள்ளி' ராஷ்மிகா என்ன சொல்லிருக்காங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அளவில் பெரும்பாலான இளைஞர்களின் மனதைக் கவர்ந்திழுக்கும் நடிகைகளின் பட்டியலில் சமீப காலமாக முன்னணி இடம் வகிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுன் - ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படமான புஷ்பா -தி ரைசிங் மக்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தை விடுங்க சார்.. மந்தனா சார்.. என ரஷ்மிகாவிற்காக புஷ்பாவை தரிசித்தவர்களும் ஏராளம்.

Advertising
>
Advertising

நச் ட்வீட்

இந்நிலையில் புஷ்பாவில் ஸ்ரீ வள்ளி எனப்படும் கதாப்பாத்திரத்தில் நடித்த மந்தனா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில்," புஷ்பா திரைப்படத்திற்கு நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி. இது மட்டுமே இன்னும் கடினமாக எங்களை உழைக்க வைக்கும். புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இதைவிட சிறந்ததாகவும் மிகப் பிரம்மாண்டமானதாகவும் இருக்கும் என நாங்கள் ப்ராமிஸ் செய்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதனுடன் புஷ்பா படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் எடுத்த தனது புகைப்படத்தையும் பதிவில் ராஷ்மிகா இணைத்துள்ளார். இளைஞர்களின் இதயத்தை சுண்டி இருக்கும் ராஷ்மிகாவின் இந்த ட்வீட் இப்போது பலராலும் லைக்ஸ் செய்யப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. 

மன்னிப்பு கேட்டும் தீராத சர்ச்சை: களத்துல இறங்கிய தமிழக போலிஸ் DGP! விசாரனையில் சித்தார்த்?

 

புஷ்பா

சுகுமாரின் இயக்கத்தில்  அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் வழக்கமான கேங்ஸ்டர் கதை அம்சத்தைக் கொண்டதாகும். சித்தூர் பகுதி, சேஷாசலம் வனப் பகுதியில் இந்தக் கதை நடக்கிறது. மரம் வெட்டும் சாதாரணக் கூலியாக அறிமுகமாகும் புஷ்பா (அல்லு அர்ஜூன்) எப்படி செம்மரக் கடத்தல் சாம்ராஜ்யத்தின் மன்னனாக விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதே புஷ்பாவின் திரைக்கதை.

“நிரூப் ஹீரோ ஆயிட்ட!” - ‘அடிச்சான் பாரு அப்பாய்ன்மெண்ட் ஆர்டர்’ .. பிரபல Ex போட்டியாளர்!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் இப்படத்தில் வெளிவந்த ஓ சொல்றியா மாமா.. மற்றும் சாமி பாடல்கள் பல ரசிகர்களின் தூக்கத்திற்கு வேட்டு வைத்தன என்றே சொல்லவேண்டும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகத் பாசிலின் நடிப்புக்கு இரண்டாம் பகுதியில் இடம் வைத்திருக்கிறார் போல இயக்குனர் சுகுமார். இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பகுதி சிறந்ததாகவும் மிகப் பிரம்மாண்டமானதாகவும் இருக்கும் என ஸ்ரீ வள்ளியான ராஷ்மிகா சொல்லியிருப்பது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் மீதான ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Rashmika Mandana Thanks his Fans for Pushba Movie

People looking for online information on புஷ்பா, ரஷ்மிகா மந்தனா, Fans, Pushba Movie, Pushba Movie Success, Rashmika Mandana will find this news story useful.