ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அதிக பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன்.

திரைப்படங்கள் மட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராமில் ரம்யா பாண்டியன் பதிவிட்டு வந்த புகைப்படங்களும் மக்கள் மத்தியல் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது.
இது போக, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி முதல் சீசன் மற்றும் பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டது, தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் அவரை அதிகம் கொண்டு போய் சேர்த்தது.
மாணவ மாணவிகளுடன் ஆட்டம்..
இதனிடையே, சேலம் பகுதியிலுள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றின் ஆண்டு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில், மேடையில் மாணவ மாணவிகள் நடனமாட, உடன் சேர்ந்து ரம்யா பாண்டியனும் நடனமாடி இருந்தார்.
இது ரம்யாவோட அரபிக் குத்து
அதிலும் குறிப்பாக, பீஸ்ட் படத்தில், அனிருத் இசையில் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்த 'அரபிக் குத்து' பாடலுக்கு அப்படியே விஜய் போடும் ஸ்டெப்கள் போட்டு அங்கிருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தி இருந்தார் ரம்யா பாண்டியன். அவர் மேடையில் இருந்த அனைத்து நிமிடங்களும், ஒட்டுமொத்த கல்லூரியும் ஆட்டம் போட்டு, கொண்டாடித் தீர்த்தது.
இது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே போல, அங்கிருந்த மாணவ மாணவிகளும் செல்ஃபி எடுக்க வற்புறுத்த, பலருடன் ரம்யா பாண்டியன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8