பிரபல நடிகை வெளியிட்ட ஸ்கூல் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் ரம்யா கிருஷ்ணன். படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக இவர் காட்டிய நடிப்பு ஆல்டைம் ஃபேவரைட்டாக கொண்டாடப்படுகிறது. மேலும் பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்து இவர் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட குரூப் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், இதில் என்னை கண்டுபிடிங்கள் என ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுத்தார். அநேக ரசிகர்கள் அவரை சரியாக கண்டுபிடித்தவிட, வெட்கத்துடன் அதை பாராட்டியிருக்கிறார் இந்த குயின் நடிகை. இதையடுத்து ரம்யா கிருஷ்ணனின் இந்த சிறுவயது புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.