90-ஸ் களின் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். அம்மன் மற்றும் தெய்வீக படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். மேலும் 1999ஆம் ஆண்டு வெளியான 'படையப்பா' படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இன்றுவரை பல நடிகைகளின் Dream ரோல் என்னவென்று கேட்டால் படையப்பா நீலாம்பரி கதாபாத்திரத்தை தான் சொல்வார்கள். அந்த அளவிற்க்கு கச்சிதமாக நடிக்கக் கூடியவர். தெலுங்கில் டாப் ஹீரோயினாக திகழ்ந்தவர் அதன் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தினார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றார்.

இப்படி பன்முகதன்மை கொண்டவர் மாபெரும் வெற்றிபெற்ற 'பாகுபலி' திரைப்படத்தில் சிவகாமி தேவியாக வாழ்ந்தார் என்றே சொல்லலாம். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை காவியமான குயின் வெப்சீரிஸில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கடைசியாக அவர் தியாகராஜன் குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் 2003-ஆம் வருடம் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் தனது மகனின் 16-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த மகிழ்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.