தமிழ் சினிமாவில் 90களில் இருந்து பிரபலமானவர் நடிகை ரம்பா. தனக்கே உரிய கியூட் நடிப்பிற்காக இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

Also Read | Nayanthara Birthday : பிறந்தநாள் ட்ரீட் .. நடிகை நயன்தாரா நடித்த கனெக்ட் பட டீசர் இன்று வெளியாகிறது!
பின்னர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிக அண்மையில்தான் இவரது பதிவில், தவறான புரிதலுடன் ஜோக் அடித்த ரசிகர் ஒருவரிடம் தமது சமூக வலைதளத்தில் நடிகை ரம்பா, நெகட்டிவாக பேசாதீர்கள். ஜோக்கிற்காக கூட இப்படி செய்ய வேண்டாம். வார்த்தைகளை பாசிடிவாக மாற்றினால், வாழ்க்கையும் பாசிடிவாக மாறும் என அன்பாக அட்வைஸ் பண்ணியிருந்தார்.
இந்நிலையில்தான் அண்மையில் நடிகை ரம்பா தம் குழந்தைகளுடனும், செவிலித்தாயுடனும் காரில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விபத்து நடந்ததாக குறிப்பிட்டு பதிவிட்டார். இதை பார்த்த ரசிகர்களும் திரையுலகினரும் பதறினர். எனினும் அனைவரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், எல்லாம் கெட்ட நாட்கள், கெட்ட நேரம் என்றும் ரம்பா அப்பதிவில் தெரிவித்திருந்தார். அத்துடன் அவருடைய மகள் குறித்தும் ரம்பா பதிவிட்டிருந்தார்.
அதன்படி குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு திரும்பிவரும் வேளையில் நடிகை ரம்பாவின் காரை, இன்னொரு கார் மோதியதாகவும், இதில் குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், தமது ஒரு மகள் மட்டும் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவருக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். ரம்பாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் வார்த்தைகளையும், ‘எல்லாம் நல்லபடிடாகிவிடும்’ என நம்பிக்கை வார்த்தைகளையும் கூறி வந்தனர்.
அதன் பிறகு குழந்தைகளின் உடல்நலம் தேறிவிட்டதாகவும், தானும் நலமுடன் இருப்பதாகவும், தமக்காகவும் தன் குழந்தைகளுக்காகவும் பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என்று நடிகை ரம்பா தமது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அதுவரை என்னாச்சு என பதறிய ரசிகர்களுக்கு ரம்பாவின் மறு பதிவு மட்டுமே ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது. இந்நிலையில்தான் நடிகை ரம்பா தமது குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர் ஒருவர், “மூன்று குழந்தைகள் முதல் குழந்தை இன்னும் குழந்தைத் தனம் மாறாமல் இருக்கிறார் ...வாழ்க வளமுடன்” என குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்வதற்கு தகுந்தாற்போல், நடிகை ரம்பாவும் தன் முதல் குழந்தையுடன் இணைந்து தானும் குழந்தையாகவே மாறி அந்த கணத்தை மகிழ்ச்சியுடன் எதிரக்கொள்வது ஆரோக்கியமாக இருப்பதாக இன்னொரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | Venkat Prabhu : மறைந்த தமது அன்னையின் பிறந்த தினம்.. இயக்குநர் வெங்கட் பிரபு உருக்கம்..!