வெக்கம், சிரிப்பு & ஸ்டைல்… EXPRESSION-ல் கலக்கிய ரகுல் ப்ரீத் சிங் LATEST PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

Advertising
>
Advertising


தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிப் படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கார்த்தி, சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் அறிமுகம்

தமிழில் ரகுல் ப்ரீத் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவான ஸ்பைடர் படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் கிடைத்தது. அதன் பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான என் ஜி கே படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். படத்தில் ரகுல் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

சிவகார்த்திகேயனோடு அயலான்

சமீபத்தில் சிவகார்த்திகேயன். நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ரிலிஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தை இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வேற லெவல் நண்பா என்ற பாடல் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.'

இந்தியன் 2

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்திலும் ரகுல் ப்ரித் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்தியன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் மொத்த படமும் முடிந்து ரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவனம் ஈர்த்த புகைப்படம்

தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் அங்கு சில இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்கள் மூலமாக புகைப்படங்களைப் பகிர்ந்து தமிழ் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. மூன்று படங்களில் ஒன்று வெக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் மற்றொன்றில் மகிழ்ச்சியாகவும் அவர் காணப்படுகிறார். மற்றொரு புகைப்படத்தில் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தைக் குவித்து வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Actress rakul preeth singh attracts with her latest photos

People looking for online information on Ayalan, Instagram, Rakul Preet Singh will find this news story useful.