நடிகை ராகுல் பிரித் சிங் தமிழில் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் பிரபல சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சமையல் செய்துள்ளார். அதில் குறிப்பாக ரகுல் ப்ரீத் சிங் பலரும் டயட் என்ற பெயரில் அரிசி சாதத்தை தவிர்ப்பதாகவும், ஆனால் உண்மையில் அரிசி சாதம் ஒரு மடங்கும் அதை விட காய்கறிகள் 2 மடங்கும் எடுத்துக் கொள்ளுதலின் சிறப்பை உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான உணவு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் urlife-ன் சமையல் நிகழ்ச்சிக்காக கீரை பட்டாணி புலவு (Spinach Peas Pulao) உணவை சமைத்துள்ளார்.
சேர்ந்து இந்த உணவை 'urlife' உபாசனா கோணிடேலா உடன் சேர்ந்து சமைத்த ரகுல் இந்த நிகழ்ச்சியில் மேலும் பல ஹெல்த் டிப்ஸ்களை கூறினார்.
இப்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ALSO READ: "தளபதி பத்தி ஒரு வார்த்தையில".. "அதுக்கு அப்பா தான் காரணம்!".. ஸ்ருதி பதில்ஸ்!