சமந்தாவை மனதார புகழ்ந்த ரகுல் ப்ரீத் சிங்..! காரணம் என்ன தெரியுமா? முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை சமந்தாவை நடிகை ரகுல் பிரீத் சிங் புகழ்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

செம! வரலெட்சுமி நடிக்கும் புதிய PAN INDIA படம்.. படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

31 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர். இவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரகுல் நடித்த 'அட்டாக்' என்ற பாலிவுட் படத்தை விளம்பரப்படுத்த இன்ஸ்டாகிராம் லைவில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் உரையாடினார். அதில் அவருக்கு பிடித்த நடிகர்கள், பிடித்த இடம், பிடித்த சினிமா காட்சி, கனவு திரைப்படம் குறித்த கேள்வி ரசிகர்களால் எழுப்பப்பட்டது. அதில் ஒரு ரசிகர் சமந்தா குறித்து கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

அதில், "நான் சமந்தாவை மிகவும் நேசிக்கிறேன் மற்றும் சமந்தாவை மிகவும் பாராட்டுகிறேன். சமந்தா எப்போதும் சிறந்த நடிகை" என கூறி, சமந்தாவுடன் தான் பங்கேற்ற நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.

தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமான வயிறுடன் நடிகை சோனம் கபூர் நடத்திய போட்டோஷூட்... செம வைரலான போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Rakul Preet Singh about Actress Samantha Ruth Prabhu

People looking for online information on அட்டாக், சமந்தா, ரகுல் ப்ரித் சிங், விண்ணைத்தாண்டி வருவாயா, Rakul Preet Singh, Samantha, Samantha ruth prabhu will find this news story useful.