பார்த்தீங்களா.!! நடிகை ராதிகாவின் பேரன் செய்யும் குறும்பு வீடியோ.. இணையத்தில் செம வைரல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராதிகாவின் மகள் ரயானே மிதுன் பகிர்ந்துள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்ஸை குவித்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80-களை கலக்கியவர் ராதிகா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கிய ராதிகா, 20 வருடங்களை சின்னத்திரை சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். 

இந்நிலையில் நடிகை ராதிகாவின் மகளான ரயானே மிதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். பிறந்து 4 மாதங்களே ஆன தனது மகள், தன்னை கடித்துவிட்டதாக மூத்த மகன் சொல்லும் வீடியோவை ரயானே பகிர்ந்துள்ளார். ''இவனின் 4 மாத தங்கச்சி, கடித்துவிட்டாளாம். நம்மளை முட்டாள் என்று நினைக்கிறானோ'' என க்யூட்டாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து ராதிகாவின் பேரன் செய்யும் இந்த குறும்பு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

நடிகை ராதிகாவின் பேரனின் குறும்பு வீடியோ வைரல் | Actress Radhika's Daughter Rayane Mithun shares her kids Cute video and goes viral

People looking for online information on Chithi 2, Radhika Daughter, Radhika Family, Radhika Sarathkumar will find this news story useful.