கொரோனாவால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். ஆனால் பலரும் முன்பை விட தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகின்றனர். இத்தனை நாள் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஓய்வில் குடும்பத்துடன் அன்பு பாராட்டுவதிலும், புரிந்து கொள்ளுதலும் அதிகரித்து இருக்கிறது.
நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அவர்கள் மட்டுமில்லாது அவர்கள் குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள ஒரு ஸ்பெஷலான நபருடன் அந்த புகைப்படத்தை ஷேர் செய்கின்றனர். யார் என்று கேட்டால் நடிகை ராதிகாவின் மகள் ரயானேவின் மகளாகிய குட்டி பேத்தியுடன் தான் ராதிகாவும், சரத்குமாரும் கொஞ்சி மகிழ்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் குழந்தைக்கு நடிகை ராதிகாவின் பெயரை ஒட்டி ரதியா என்ற பெயரை சூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.