விஜய் சேதுபதி- காத்ரீனா கைஃப் படத்தில் ராதிகா? போலீஸ் கெட்டப்பில் வைரல் PICS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "தமிழ் சினிமா நல்லாருக்கு.. விட்ருங்கப்பா" - KGF 2 விஷயத்தில் CV குமார் போட்ட List

அந்தாதூனுக்குப் பிறகு மெர்ரி கிறிஸ்துமஸ்

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணையும் படத்திற்கு  மேரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார். ஸ்ரீராம் ராகவன் பாலிவுட்டில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் அந்ததூண், ஏஜெண்ட் வினோத், பத்லாபூர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர். இவரின் சமீபத்தைய படமான அந்தாதூன் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தாதூன் திரைப்படம் தற்போது தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

பாலிவுட்டில் விஜய் சேதுபதி…

தமிழைத் தவிர தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே மும்பைகார் என்ற பாலிவுட் படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார். அந்த படம் தமிழில் வெளியாகி ஹிட்டான மாநகரம் படத்தின் ரீமேக் ஆகும். அதில் முனீஸ்காந்த் நடித்த பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரின் இரண்டாவது படமாக ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ உருவாகி வருகிறது. ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரௌத்ரே தயாரிக்கிறார்கள். அடுத்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

போலிஸ் கெட்டப்பில் ராதிகா…

இந்நிலையில் முன்னணி தமிழ் நடிகையான ராதிகா படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடிகை காத்ரினா கைப்போடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதில், “ஒரு வாரமாக காத்ரினா கைஃப்போடு பணிபுரிந்தேன். உன்னதமான நபர்.” எனக் கூறியுள்ளார். அதில் எந்த படத்தில் இருவரும் இணைந்து பணிபுரிகிறார்கள் என்பது பற்றி சொல்லவில்லை என்றாலும், அது விஜய் சேதுபதி காத்ரினா கைஃப் நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படமாகதான் இருக்கும் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிஸியான நடிகையாக நடித்து வருபவர் ராதிகா. இப்போது அவர் பாலிவுட் படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | ஆஹா.. கனா காணும் காலங்கள் இப்போ OTT-ல் வெப் சீரிஸா வருது! செம update

தொடர்புடைய இணைப்புகள்

Actress Radhika sarathkumar with Katrina kaif bts pics

People looking for online information on காத்ரீனா கைஃப், ராதிகா, விஜய் சேதுபதி, Katrina Kaif, Radhika Sarathkumar, Vijay Sethupathi will find this news story useful.