நடிகை ராதிகா ஆப்தேவின் வைரலாகும் புதிய டாட்டூ.. வியந்து பாராட்டிய பிரபல நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே.

Advertising
>
Advertising

2009 ஆம் ஆண்டு பெங்காலி படமான அந்தஹீனில் ராதிகா ஆப்தே கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் அவர் 2015ல் பத்லாபூர்,   மஞ்சி - தி மவுண்டன் மேன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபோபியா மற்றும் பார்ச்ட் ஆகிய  திரைப்படங்களில் அவரது முன்னணி பாத்திரங்கள் அவருக்கு மேலும் பாராட்டைப் பெற்றுத் தந்தன. குல்ஷன் தேவையா மற்றும் ஷஹானா கோஸ்வாமி நடித்த தி ஸ்லீப்வாக்கர்ஸ் மூலம் ஆப்தே இயக்குனராக அறிமுகமானார்.

ராதிகா ஆப்தே, முக்கியமாக இந்தி படங்களில் நடித்துள்ளார், மேலும் சில தமிழ், மராத்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் 2013ல் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடித்தார் ராதிகா ஆப்தே.

ராதிகா ஆப்தே, லண்டனைச் சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை 2012ல்  திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்தியில் உருவாகி உள்ள விக்ரம் வேதா படத்தில் கதாநாயகியாக சயிப் அலிகானின் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே, தனது உடலில் ஆமை வடிவத்தை பச்சை குத்தியுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவுக்கு பிரபல நடிகை ரீமா கல்லிங்கல் "அந்த டாட்டூ" என கமெண்ட் செய்து தனது ஆச்சரியத்தை பதிவு செய்துள்ளார். ரீமா கல்லிங்கல், தமிழில் கோ, யுவன் யுவதி, சித்திரைச் செவ்வானம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Actress Radhika Apte Viral Little Tortoise Tatoo Image

People looking for online information on Radhika Apte, Reema Kalingal, Tattoo will find this news story useful.