வளைகாப்புக்கு வரமுடியாத சூழ்நிலையில் கணவர்.. வீடியோ CALL செய்த நடிகை பூர்ணா 😍 CUTE PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூர்ணா, தனது வளைகாப்பு புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "MGR - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய்.. ஜெயம் ரவிக்கு போட்டி யாரு?".. செம்ம பதில் அளித்த ஜெயம் ரவி!

நடிகை பூர்ணா, நடிகர் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.  ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்பெயராக பூர்ணா என்றே ரசிகர்களால் அறியப்படுகிறார்.

அருள்நிதி நடித்த தகராறு, சசிக்குமாரின் கொடிவீரன், சவரக்கத்தி உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களிலும் பூர்ணா நடித்துள்ளார். தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமா தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற சினிமா படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. கடைசியாக நடிகை பூர்ணா நடிப்பில்   வெளியான 'விசித்திரன்' படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக  நடித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் ரிலீசாக உள்ளது.

கேரளாவை சார்ந்த மலையாள நடிகையான பூர்ணா, சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மணமகன் சானித் ஆசிப் அலி JBS நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். துபாய் & அமீரகத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சில நாட்களுக்கு முன் நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் கணவர் வீட்டில் நடந்த தமது வளைகாப்பு புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூர்ணா பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நடிகை பூர்ணா மேலும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அதில் தமது கணவர் ஆசிப் அலியுடன் வளைகாப்பின் போது வீடியோ காலிங் செய்து பேசும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் பூர்ணாவின் தாய் & தந்தையர் ஆசிர்வாதம் செய்யும் புகைப்படங்கள், பூர்ணா வளையல்கள் குலுங்க சிரிக்கும் புகைப்படங்கள், இனிப்பு வகைகளை உண்ணும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூர்ணா வெளியிட்டுள்ளார்.

Also Read | 3 வருசங்கழிச்சு லேடி கெட்டப்ல.. குக் வித் கோமாளியில் கலக்கிய புகழ்.. களைகட்டிய Cooku With Comali 4

தொடர்புடைய இணைப்புகள்

Actress Purnaa Video Call with Her Husband Baby Shower Function Photos

People looking for online information on Poorna, Shamna Kasim, Shamna Kasim Baby Shower Function will find this news story useful.